செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அதிமுக தேர்தல் அறிக்கை:

விரிவான பார்வை
Posted: 2014-02-28 01:59:49 | Last Updated: 2014-03-01 19:18:21
அதிமுக தேர்தல் அறிக்கை:

அதிமுக தேர்தல் அறிக்கை:

மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி உருவாக்கப்படின் மதச்சார்பின்மை கொள்கை நிலைநாட்டப்பட்டு மேம்படுத்தப்படும் என்று உறுதியளிக் கப்பட்டுள்ளது. அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த செவ்வாயன்று சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். தமிழில் உள்ள அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆங்கிலத்தில் உள்ள அறிக்கையை மாநில மகளிர் ஆணைய தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

வளமான இந்தியா உருவாக, வலிமையான நல்லரசு அமைய, தமிழ்நாடு தழைத்தோங்க மக்களின் ஆதரவை கோருகிற தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் முக்கிய சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கல்வி, மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்திட்டங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, மற்றும் திமுகவால் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கூட்டாட்சி : இத்தேர்தல் அறிக்கையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தாமல் தத்தம் எல்லைக்குள், தனக்கான எல்லைக்குள் சுதந்திர செயல்பாட்டோடு பொதுப் பிரச்சனைகளை கூட்டுறவு மனப்பான்மையுடன் அணுகி தீர்வு காண வேண்டும். இதுவே கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் ஆகும். இந்தக் கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த, செயல்படுத்த, நிலைநிறுத்த, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்காக : சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும்; தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், மீனவர்களின் நலன்களைக் பாதுகாக்கும் வகையில் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் சீரமைக்கப்படும். சில்லறை வர்த்தகம் : சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கொள்கையை அகில இந்திய அளவில் அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படும். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும். இதுவன்றி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்மொழியை அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொது விநியோகம் : அனைவருக்கும் பொது விநியோகத் திட் டம் இருக்கின்ற மாநிலங்களில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தினை நடை முறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டின் மாதத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை பெறத் தேவையான நடவடிக்கைகள், மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச்செல்லும் வகையில், புதிய மின் வழித்தடங் களை அமைக்கவும், வலுப்படுத்தவும் தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கை.

தேசிய அளவில் : இதே போல், நாடு தழுவிய அளவிலான தேர்தல் வாக்குறுதிகளும் அஇஅதிமுக அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன. மதச் சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும், மேம்படுத்தவும் அதிமுக பாடுபடும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்துநிலைநாட்ட அதிமுக பாடுபடும். இதே போன்று, மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நதிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கும், நதிகளை இணைப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் முற்றிலும் நிறுத்தப்படும். மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.