செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

116 வயது இளைஞரின் அபார சாதனை

116 வயது இளைஞரின் அபார சாதனை
Posted: 2014-02-28 07:06:40 | Last Updated: 2014-03-01 19:18:59
116 வயது இளைஞரின் அபார சாதனை

116 வயது இளைஞரின் அபார சாதனை

தனக்கு 116 வயது என்று கூறும் தர்மபால் குஜ்ஜார் தன்னுடைய தடகளத் திறமையின் மூலம் புகழ் தேடிக் கொண்டவர். அவர் கோயம்புத்தூரில் நடந்த 35 ஆவது தேசிய மாஸ்டர்ஸ் தடகள வாகையர் போட்டிகளில் 200மீற்றர் தொலைவை 46.74 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். மிகவும் நன்கு அறியப்பட்ட நூறுவயதுக்கு மேலான தடகள வீரர் பாஜா சிங்குடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வதை அவர் மிகவும் விரும்புகிறார். அவர் இதே போட்டியில் செவ்வாயன்று 400மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் குதா கிராமத்தில் 6-10-1987 அன்று பிறந்தார். மிக சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் அவர் பிறந்தார் என அவருடைய சொந்த முகநூல் கூறுகிறது. ஆடம்பர வாழ்க்கைக்கும், உயர்கல்விக்கும் இருந்த வாய்ப்புகள் குறைவானதவை. குடும்பத்தின் முக்கிய வேலையாக விவசாயம் இருந்தது.

200 மீட்டரில் உசேன் போல்ட்டின் உலகச்சாதனை நேரம் 19.19 வினாடிகள் என்னும் போது குஜ்ஜாரின் 116 வயதுச் சாதனை பிரமிக்க வைப்பதாகும். நிகழ்ச்சிகளில் பங்கேற்க சக விவசாயிகள் தனக்கு பணம் கொடுத்து உதவுகின்றனர் என அவர் கூறியுள்ளார். சில வேளைகளில் அவருக்கும் அவர்கள் உணவும் கொடுக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். அரசிடமிருந்து எவ்வித நிதியுதவியையும் கேட்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நிதியின்மை காரணமாக தன்னால் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க முடியாததமை குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி வீரரான 103 வயதான பாஜா சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்ட பின் இவர் மட்டுமே உலகின் மூத்த வீரர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார். இவர்தான் உலகின் மூத்த மனிதராகவும், முகநூல் வைத்திருக்கும் மூத்த நபர் என்ற பெயரையும் பெறுகிறார்.