செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இலங்கையிலிருந்து ஹஜ் பயணம் செல்வோர் பட்டியலை ரத்து செய்தது உயர் நீதிமன்று

Posted: 2014-07-23 07:00:28
இலங்கையிலிருந்து ஹஜ் பயணம் செல்வோர் பட்டியலை ரத்து செய்தது உயர் நீதிமன்று

இலங்கையிலிருந்து ஹஜ் பயணம் செல்வோர் பட்டியலை ரத்து செய்தது உயர் நீதிமன்று

இலங்கையிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோர்களை முடிவு செய்யும் பட்டியலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அந்தப் பயணத்துக்கு செல்லவுள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பயண முகவர்களிடையே பகிர்ந்தளித்து, அரசாங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலே இலங்கை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

ஹஜ் புனிதப் பயணத்துக்கு யாத்திரிகர்களை அனுப்பும் பயண முகவர்கள், அதற்கான நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, அந்த எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென, முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த யாத்திரைக்கு செல்லவுள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பகிர்ந்தளிக்கும் போது, முறைகேடுகள் நடைபெற்றன என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்த காரணத்தினாலேயே, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புதிதாக தயாரிக்கப்படும் பயணிகளின் பட்டியல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் பணித்துள்ளது.

இதேவேளை, இந்த உத்தரவு காரணமாக பயணம் மேற்கொள்ளவுள்ளவர்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.