செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்!

Posted: 2016-08-25 10:12:29 | Last Updated: 2016-08-25 10:13:29
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து  ஓய்வுபெறுகிறார் டில்ஷான்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பிரபல துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வுபெறவுள்ளார் என அறிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெற்றுள்ள டில்ஷான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெறவுள்ள முன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு, தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறவுள்ளார் என்று அவர் அறிவித்துள்ளார்.

அதேபோன்று செப்ரெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறவுள்ள 20-20 ஓவர்கள் போட்டிகளுக்கு பின்னர், தான் இருபது 20-20 ஓவர்கள் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த டில்ஷான் தனது விளையாட்டு திறமையில் எவ்விதமான பின்னடைவுகளும் ஏற்படாத காரணத்தினால், தனது ஒய்வு குறித்து தொடர்பாக எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அறிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில், 39 வயதான டில்ஷான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறும் முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள டில்ஷான், 5,492 ஓட்டங்களையும், 39 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும், தான் விளையாடிய 329 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில், 10,248 ஓட்டங்களையும், 106 விக்கெட்டுகளையும் அவர் பெற்றுள்ளார். மொத்தம் 78, 20-20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான், 1,884 ஓட்டங்களையும், 7 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார்.