செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்

Posted: 2016-08-25 10:21:35
சாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை   சிங்கப்பூரில் ஆரம்பம்

சாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்

சாரதி இல்லாமல் தானாக இயங்கும் வாடகைக் கார் சேவை உலகிலேயே முதல்முறையாக சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.

காரில் ஏறுவதற்கு மற்றும் இறங்குவதற்கு, குறிப்பிட்ட இடங்களுக்கு இடையில் இனிமேல் பயணிகள் எளிதாக பயணிக்கலாம்.

ஆனால் தற்போதைக்கு அவசரகால ஓட்டுநர் ஒருவர் அதில் இருப்பார்.

அமெரிக்காவில் இது போன்றதொரு சேவையை உபேர் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு முன்னர், புதிதாக தொடங்கியுள்ள நியுடோனோமி நிறுவனம் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தால் இயக்கப்படுகின்ற தானியங்கி வாகனச் சேவையானது கலிஃபோர்னியாவில் பல ஆண்டுகளாக சோதனை முறையில் இயங்கி வருகிறது.

ஆனால், அவை பொது மக்களின் சேவைக்கு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.