செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

உலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி

Posted: 2016-09-07 03:08:41
உலகின் முதலாவது முகமாற்று  அறுவைச் சிகிச்சை தோல்வி

உலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி

உலகில் முதன்முறையாக முகமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிரான்ஸை சேர்ந்தவரான இசபெல்லெ டினோரி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் செல்லப்பிராணியான நாய் கடித்ததில் அவரது முகம் விகாரமாக மாறியது. இதனால், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முகப்பாகங்கள் அவருக்குப் பொருத்தப்பட்டன.

கடந்த 2005 ஆம் ஆண்டு மருத்துவர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் நவம்பர் 27 ஆம் திகதி உலகின் முதல் முகமாற்று அறுவைச் சிகிச்சையை நடத்தினர். முகமாற்று அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட டினோரிக்கு பக்க விளைவுகள் அதிகரித்தது. இதனால் கடந்த ஆண்டு அவரின் உடல்நிலை மோசமாகியது.

அவருக்கு மருத்துவர்கள் .தொடர் சிகிச்சை அளித்தும் அது பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் அவர் உயிரிழந்தார். இந்தத் தகவலை தற்போதுதான் ஏமியன்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இதுவரை அவரது சாவு குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை முகமாற்று அறுவைச் சிகிச்சையின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால், அந்த மருந்துகளின் வீரியத்தால் இரு புற்றுநோய் கட்டிகள் உருவாகி ன. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.