செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் முன்னிலையில்!

Posted: 2016-09-07 03:38:16 | Last Updated: 2016-09-07 06:52:58
கருத்துக்கணிப்புகளில்  டிரம்ப் முன்னிலையில்!

கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் முன்னிலையில்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருக்கின்றார் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம் முடிவதை அடுத்து அங்கு எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து ஏற்கனவே பல கருத்து கணிப்புகள் வெளிவந்தன.

அதில், ஹலாரிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. டொனால்ட் டிரம்பை விட அவருக்கு கூடுதலாக 7 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்று முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இந்தநிலையில் நேற்று சி.என்.என். ரி.வி., ரொய்ட்டர் செய்தி நிறுவனம், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை மற்றும் பல நிறுவனங்கள் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஹிலாரி கிளிண்டனைவிட டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார் என்று கூறுகின்றன.

சி.என்.என். வெளியிட்ட கருத்துக் கணிப்பில் டொனால்ட்டுக்கு 45 சதவீத ஆதரவும், ஹிலாரிக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைற்ஹவுஸ் வோச் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் டொனால்டுக்கு 40 சதவீதமும், ஹிலாரிக்கு 30 சதவீத ஆதரவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு மட்டும் டொனால்டு டிரம்பை விட ஹிலாரிக்கு சற்று அதிக ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சி.என்.என். கருத்து கணிப்பின்படி இளைஞர்கள் மத்தியில் 50 சதவீதமும், டெனால்டுக்கு 29 சதவீதமும் ஆதரவு உள்ளன. ஆனால், பெரியவர்கள் மத்தியில் டொனால்டுக்கு 54 சதவீதமும், ஹிலாரிக்கு 35 சதவீதமும் ஆதரவு உள்ளன.

பெண்களைப் பொறுத்த வரையில் ஹிலாரிக்கு 53 சதவீதமும், டெனால்ட்டுக்கு 38 சதவீதமும் ஆதரவு இருக்கின்றன. ஆனால், ஆண்கள் தரப்பில் டொனால்ட்டுக்கு 54 சதவீதமும், ஹிலாரிக்கு 32 சதவீதமும் ஆதரவு கிடைக்கின்றன.

வெள்ளையர்கள் மத்தியில் டொனால்டுக்குதான் அதிக ஆதரவு இருக்கிறது. அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு கொள்கைபற்றி அவர் கூறிய கருத்துக்கள் வெள்ளையர்கள் மத்தியில் அவருக்கு அதிக ஆதரவை பெற்றுத் தந்துள்ளன.