செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்!

Posted: 2016-09-09 03:39:01
வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்!

வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்!

வடகொரியாவில் ஐந்தாவது முறையாக அணு ஆயுத பரிசோதனை நடத்தப்பட்ட பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியா பியூங்கி என்னும் இடத்தில் ஐந்தாவது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட போது அப்பகுதியில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்தை தென்கொரியா கூட்டி உள்ளது. வடகொரியாவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதை அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சீன நில அதிர்வு ஆய்வு கழகங்கள் உறுதி செய்துள்ளன.

வடகொரியா, ஜனவரி மாதத்தில் தனது 4-வது அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக ஐ.நா.,வின் கடும் கண்டனத்திற்குள் ஆளானது.

உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக அவ்வப்போது வடகொரிய இதுபோன்ற பயங்கர ஆணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஐ.நா.,வின் கடும் கண்டனத்திற்குள் ஆளானது. இருப்பினும் சில தினங்களுக்கு முன் ஜி20 மாநாடு நடைபெற்றபோது வட கொரியா மூன்று பயங்கர ஏவுகணைகளை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.