செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்

Posted: 2016-09-09 09:57:04
வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்

வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்

வடக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய போலி ஆசிரியர்கள் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஆசிரியர்களாக இணைந்துகொண்டுள்ளமை கண்டறியப்பட்டதாலேயே அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.

மேற்படி ஆசிரியர்களின் சேவையை நிரந்தரமாக்குவதற்காக ஆவணங்களை பரிசீலணை செய்தபோதே இவர்களின் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் இருவர் அதிபராகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இதில் ஆசிரியைகளும் உள்ளடங்கியிருந்தனர் என்றும் இரவீந்திரன் தெரிவித்தார்.

போலிச் சான்றிதழ் என்று இனங்காணப்பட்ட அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர்கள் சேவையாற்றிய காலத்தில் பெற்ற அரச கொடுப்பனவுகளை மீளச் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொடுப்பனவுகளை மீழ் செலுத்த மறுப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.